ஒரு நாளைக்கு 7 லட்சம் பீப் பாய்கள் எண்ணெய் உற்பத்தியை குறைப்பதற்கு பெட்ரோல் ஏற்று மதி செய்யும் நாடுகளின் கூட் டமைப்பு (ஒபெக்) ஒத்துக் கொண் டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதற்கு போடப்பட்டுள்ள முதல் ஒப்பந்தம் இதுவாகும்.
``ஒபெக் கூட்டமைப்பு அபூர்வ மான முடிவை நேற்று எடுத்துள் ளது. இரண்டரை ஆண்டு காலத் திற்கு பிறகு எண்ணெய் சந்தையை நிர்வகிப்பதற்கு ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது’’ என்று ஈரான் நாட்டு எண்ணெய் வளத்துறை அமைச்சர் பிஜான் சங்கேனேக் தெரிவித்துள்ளார். ஒபெக் கூட்டமைப்பு அதிகளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு நாளைக்கு 7 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தியை குறைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது என்று சங்கேனேக் கூறினார்.
ஒபெக் மதிப்பீட்டின்படி தற் போது கச்சா எண்ணெய் உற்பத்தி 3.32 கோடி பீப்பாய்கள். இருப்பினும் ஒபெக் கூட்டமைப்பில் உள்ள ஒவ் வொரு நாடும் எவ்வளவு எண்ணெய் உற்பத்தி செய்யவேண்டும் என்பது அடுத்து நவம்பர் மாதம் நடக்க வுள்ள ஒபெக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். ஒபெக் கூட்டமைப் பில் இல்லாத ரஷ்யாவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறது. இந்த ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியானதை தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை சுமார் ஐந்து சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்று 48 டாலர் என்ற விலையில் வர்த்தகமானது.
சில வருடங்களுக்கு பிறகு சந்தையை மீட்பதற்கான நடவடிக் கைகளை ஒபெக் எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பல வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.