கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருந்தும் சுப்ரதா ராய் ஏன் சிறை யில் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது. சஹாரா நிறுவனத் தலை வர் சுப்ரதா ராய் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ரூ.200 கோடி செலுத்துவதற்கு ஏற்ப ஜூலை 11 வரை அவரது ஜாமீனை நீட்டித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான அமர்வு கடந்த மே6-ம் தேதி சுப்ரதா ராய் மற்றும் குழும இயக்குநர் அசோக் ராய் சவுத்ரி ஆகியோருக்கு நான்கு வார கால ஜாமீன் வழங்கி இருந்தது. நீண்ட காலமாக நோய்வாய்ப் பட்டிருந்த சுப்ரதா ராயின் தாயார் இறந்ததையடுத்து அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜாமீன் வழங்கப்பட்டது.
ரூ.36,000 கோடி கடனில் செபி யிடம் 12,000 கோடி ரூபாயை ஏற்கெ னவே அளித்துள்ளார் என குறிப்பிட்ட அவரது வழக்கறிஞர் கபில் சிபல் சுப்ரதா ராயின் சொத்துக்கள் பட்டி யலை சீலிடப்பட்ட உறையில் நீதிபதி களிடத்தில் அளித்தார். இதன் அடிப்படையில் இந்த ஜாமீன் அவருக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராயின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அசையும் அசையா சொத்துக்களை பட்டிய லிட்ட நீதிபதிகள் சுப்ரதா ராய் செலுத்த வேண்டிய கடனை விட அவரது சொத்துக்களின் மதிப்பு அதிகமாக இருக்கிறதே என்று கேள்வி எழுப்பினர். எதற்காக கடன் களை திரும்ப செலுத்தாமல் இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருக்க வேண்டும். எதற்காக கடனை திரும்ப செலுத்த தயக்கம் காட்டுகிறார் என கேள்வி எழுப்பினர்.
இதனிடையே சஹாரா குழும சொத்துகளை ஏலத்தில் விற்பதற் கான நடவடிக்கைகளை `செபி’ மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.