வணிகம்

பங்குச் சந்தை: 37 புள்ளிகள் சரிவு

செய்திப்பிரிவு

திங்கள் கிழமை வர்த்தகத்தில் பங்குச் சந்தை குறியீட்டெண் 37 புள்ளிகள் சரிந்து 25190 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 8 புள்ளிகள் சரிந்து 7533 புள்ளிகளில் முடிவடைந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய சந்தைகள் சரிவுடன் முடிவடைகின்றன.

இராக் மீதான அமெரிக்க தலையீடு, பணவீக்கம் ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து, நிறுவன மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்தது ஆகிய காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் சரிந்தன. முக்கிய சந்தைகள் சரிந்ததற்கு நேர் மாறாக ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் குறியீடுகள் 0.3 சதவீதம் வரை உயர்ந்து முடிவடைந்தன.

ஆனால் ஐ.டி., ஹெல்த் கேர், ரியால்டி ஆகிய துறை பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன. மாறாக கேபிடல் குட்ஸ், வங்கி, ஆட்டோ ஆகிய துறை பங்குகள் சரிந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் பங்குகளில் கெயில், சன்பார்மா, டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் மற்றும் டாடா பவர் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன. மாறாக ஆக்ஸிஸ் வங்கி, எம் அண்ட் எம், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்ளின் பங்குகள் சரிந்தன.

SCROLL FOR NEXT