லார்சன் அண்ட் டியூப்ரோ ஃபைனான்ஸ் நிறுவன பங்குகள் கைமாறியதில் நடைபெற்ற உள்பேர வர்த்தகம் குறித்து விசாரிக்க வெளிநாடுகளின் உதவியை நாட பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) முடிவு செய்துள்ளது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் (எப்ஐஐ) மற்றும் பிற நிறுவனங்களும் இந்த விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் ஹாங்காங், சிங்கப்பூர், மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாட உள்ளது.
எல் அண்ட் டி ஃபைனா பங்கு வர்த்தகத்தில் உள்பேர வணிகம் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவு செபி அமைப்பு கேமன் ஐலண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஹெட்ஜ் நிதியத்தை ரத்து செய்தது. அத்துடன் ஃபேக்டோரியல் மாஸ்டர் ஃபண்ட் முதலீட்டையும் ரத்து செய்தது.
இவ்விரு நிதியும் ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபேக்டோரியல் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவனம் மூலம் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது. இவை பி-நோட் அடிப்படையில் முதலீடு செய்யப்பட்டன. ஐந்து வெவ்வேறு அந்நிய நிறுவனங்கள் பெயரில் இவை முதலீடு செய்யப்பட்டன. இத்தகைய முதலீடுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமான வகையில் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் மிகப் பெரும் அளவில் முறைகேடு, முறையற்ற வர்த்தக நடைமுறை யை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பின்பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சில பங்குச் சந்தையிலிருந்து ஹெட்ஜ் ஃபண்ட் கேமன் தீவு, ஐஸில் ஆஃப் மேன், பெர்முடா மற்றும் பிரிட்டிஷ் தீவு ஆகியவற்றிலிருந்து முதலீடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. வரி ஏய்ப்புக்காக கறுப்புப் பணம் இந்தியாவுக்கு திரும்ப வந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
சந்தேகிக்கப்படும் நிறுவனங் களில் சில சிங்கப்பூர், மொரீஷியஸ் ஹாங்காங்கில் பதிவு பெற்றவை. இந்த நாடுகளின் பங்குச் சந்தைகள் மூலம் இந்நிறுவனங்கள் பற்றிய தகவல்களைப் பெற செபி முடிவு செய்துள்ளது. இந்த முதலீடு மூலம் ரூ. 20 ோகடி வரை லாபம் ஈட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.