கனரா வங்கியின் மார்ச் காலாண்டு நஷ்டம் ரூ.3,905 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 612 கோடி ரூபாய் லாபமீட்டியது குறிப்பிடத்தக்கது.
மார்ச் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 12,429 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 12,116 கோடி ரூபாயாக இருக்கிறது.
மார்ச் காலாண்டில் மொத்த வாராக்கடன் 9.4 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 3.89 சதவீதமாக இருந்தது. ரூபாய் மதிப்பில் 31,637 கோடி ரூபாய் மொத்த வாராக்கடனாகும். நிகர வாராக்கடன் 2.65 சதவீதத்தில் இருந்து 6.42 சதவீதமாக அதிக ரித்திருக்கிறது.
கடந்த வருடம் மார்ச் காலாண்டில் வாராக்கடனுக் காக 1,009 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த மார்ச் காலாண்டில் இந்த தொகை 6 மடங்கு அதிகரித்து 6,331 கோடி ரூபாயாக இருக்கிறது.
2015-16-ம் நிதி ஆண்டில் நிகர நஷ்டம் 2,812 கோடி ரூபா யாக இருக்கிறது, முந்தைய 2014-15 நிதி ஆண்டில் 2,702 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. மொத்த வரு மானமும் ரூ.48,300 கோடியி லிருந்து ரூ.48,897 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டுக்கு இயக்குநர் குழு டிவிடெண்ட் ஏதும் பரிந் துரை செய்யவில்லை. வெள் ளிக்கிழமை வர்த்தகத்தின் முடி வில் 3.3 சதவீதம் சரிந்து 192.65 ரூபாயில் இந்த பங்கு முடி வடைந்தது.
ஐஓபி நஷ்டம் ரூ.939 கோடி
பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர நஷ்டம் ரூ.936 கோடியாக இருக் கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை இரு மடங்காக அதிகரித்தி ருப்பதால் நஷ்டத் தின் அளவு அதிகரித்து இருக்கிறது.
கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 6,704.03 கோடி ரூபாயாக இருந்த வங்கியின் மொத்த வருமானம் ரூ. 6,157.72 கோடியாகக் குறைந்துள்ளது.
2014-15ம் ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ. 35.50 கோடியாக இருந்தது. தற்போது வாராக் கடனுக்காக 2,666.16 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 986.23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப் பிடத்தக்கது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 8.33 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் தற்போது 17.40 சதவீதமாக அதிகரித் துள்ளது.
2015-16 நிதியாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2,897 கோடி நஷ்டத்தை சந் தித்துள்ளது. 201-15 நிதியாண் டில் 454.33 கோடி ரூபாய் நஷ் டத்தை சந்தித்தது குறிப்பிடத் தக்கது.
இந்த நிதியாண்டில் வங்கியின் மொத்த வருமானமும் 26,045.55 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் வங்கியின் வரு மானம் ரூ. 26,076.93 கோடி ரூபாயாக இருந்தது குறிப் பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ஐஓபி பங்கு 1.25 சதவீதம் குறைந்து 27.60 ரூபாயில் முடிவடைந்தது.