போட்டி ஒழுங்கு முறை ஆணையத்தின் (சிசிஐ) முன்னாள் தலைவரான அசோக் சாவ்லா தேசிய பங்குச்சந்தையின் தலைவராக உள்ளார். `செபி’-யின் அனுமதிக்கு பிறகு தலைவராக இவர் நியமிக்கப்பட இருக்கிறார்.
முன்னதாக, சில வாரங்களுக்கு முன்பு அசோக் சாவ்லா மற்றும் தர்மிஷ்ட ராவல் ஆகியோரை பொதுநல இயக்குநர்களாக என்எஸ்இ நியமனம் செய்தது.
ஐஏஎஸ் அதிகாரியான சாவ்லா போட்டி ஒழுங்கு முறை ஆணையத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றி, கடந்த ஜனவரியில் ஓய்வு பெற்றார். விமான போக்குவரத்துறை, நிதி அமைச்சகம் ஆகியவற்றில் செயலாளராக பணியாற்றியவர்.
தலைவராக இருந்த எஸ்பி மாத்தூர் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒய்வு பெற்ற காரணத்தினால் சாவ்லா தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தவிர மூன்று பொதுநல இயக்குநர்களான ஒய்.மாலேகம், கேஆர்எஸ் மூர்த்தி மற்றும் எஸ் சடகோபன் ஆகியோரின் பதவிக் காலமும் முடிவடைந்துவிட்டது.