வணிகம்

ஐடி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.40,000 கோடி முதலீடு

செய்திப்பிரிவு

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாத இறுதி வரை தகவல் தொழில்நுட்ப பங்குகளில் 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கின்றன. ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக ஐடி நிறு வனங்களின் லாப வரம்பு உயரும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக முதலீடு உயர்ந்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரலில் 34,100 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்திருந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.

ஐடி நிறுவனங்களின் 85 சதவீத வருமானம் ஏற்றுமதி மூலமாக கிடைக்கிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து அதிக வருமானத்தை இந்த நிறு வனங்கள் ஈட்டுகின்றன.

கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து கடந்த ஏப்ரல் வரை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4.8 சதவீதம் சரிந்திருக்கிறது. தற்போது ஒரு டாலர் 67 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. செபி தகவல்கள்படி ஏப்ரல் வரை 40,194 கோடி ரூபாய் ஐடி பங்குகளில் மியூச் சுவல் பண்ட்கள் முதலீடு செய் துள்ளன. கடந்த ஜனவரியில் இது வரை இல்லாத அளவு அதிக பட்சமாக 43,115 கோடி ரூபாய ஐடி பங்குகளில் முதலீடு இருந் துள்ளது.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங் கள் பங்குச்சந்தையில் செய்துள்ள மொத்த முதலீட்டில் ஐடி பங்குகளின் மதிப்பு 9.54 சத வீதம். கடந்த வருடம் ஏப்ரலில் 9.43 சதவீதமாகும்.

இருந்தாலும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் விருப்ப பட்டியலில் ஐடி பங்குகள் இரண் டாம் இடத்தில்தான் உள்ளன. கடந்த ஏப்ரலில் வங்கிப்பங்கு களில் ரூ.85,330 கோடியை மியூச் சுவல் பண்ட்கள் முதலீடு செய்துள்ளன.

பார்மா துறையில் 32,820 கோடி ரூபாயும், ஆட்டோமொபைல் துறையில் 28,563 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளன.

SCROLL FOR NEXT