வணிகம்

மூன்றாம் ஆண்டில் வளர்ச்சி மேலும் உயரும்: அருண் ஜேட்லி நம்பிக்கை

செய்திப்பிரிவு

பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டு கள் முடிவடைந்து மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது. இந்த ஆண்டு மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்படும், இதன் மூலம் வளர்ச்சி உயரும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

இந்த அரசின் நடுத்தர காலத் தில் நாங்கள் இருக்கிறோம். எதிர் காலத்துக்காக திட்டமிடுவதற்கான நேரம் இது. கிரிக்கெட் விளை யாட்டில் கடைசி ஓவர்களில் ஓர் அணி எப்படி விளையாடுமோ அது போலவே முதல் இரு வருடங் களிலும் நாங்கள் செயல்பட்டோம்.

முந்தைய அரசில் கொள்கை முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் நிலவியது. மோடி தலைமையி லான அரசு பதவி ஏற்றவுடன் அரசில் மற்றும் நிர்வாக சூழல் முற்றிலும் மாறியது. அரசாங்கம் வேகமாக இயங்குகிறது. இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை. அதிகாரம், விருப்புரிமை ஆகியவை நீங்கியுள்ளன.

மூன்றாம் ஆண்டில் இந்தியா வின் கட்டுமானம், கிராமப் பகுதி மேம்பாடு, சமூக மேம்பாடு ஆகிய பிரிவுகளில் மத்திய அரசு முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. கிராம பகுதிகளில் முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு சாலைகள் அமைக்கப்படும். இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT