தனது அரசு அதிகபட்ச சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் வரும் காலங்களில் கடுமை யான சவால்கள் காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப் பிட்டார்.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் நரேந் திர மோடி, அதற்கு முன்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இத்தகவலைக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தாராளமயமாக்கலுக்கு உதவும் பெருமளவிலான சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது அரசு அதிகபட்ச பொருளாதார சீர்திருத்தங்களை செய்துள்ளது. அதேபோல அதிகபட்ச சவாலை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முந்தைய அரசு நிர்வாக ரீதியில் செயல்படுத்த முடியாமல் தவித்த பல்வேறு மாற்றங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. அரசு பொறுப்பேற்றவுடன் அனைத்து நிபுணர்கள் மற்றும் வல்லுநர் களிடம் நான் கேட்ட ஒரே கேள்வி பெரு வெடிப்பு (Big Bang) என்றால் என்ன என்பதுதான். பொருளாதாரத் தில் பெரு வெடிப்பு என்பதற்கு ஒருவருமே விளக்கம் அளிக்க வில்லை. ஆனால் அதேசமயம் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்பதை உணர்ந்தேன்.
நிலம் கையகப்படுத்துவதில் சிரமம் நீடிப்பதாக தொழில்துறை யினர் கூறும் குற்றச்சாட்டுக்கு பதில ளித்த மோடி, இது தொடர் பாக அனைத்து விதிமுறைகளை யும் மத்திய அரசு எளிமைப்படுத்தி யுள்ளது. இதை செயல்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்தான் என்றார்.
மிகக் கடுமையாகக் கருதப்பட்ட தொழிலாளர் சட்டமும் திருத்தப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் மோடி. தொழிலாளர் சட்ட திருத்தம் தொழில்துறையினர் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டதல்ல, இது தொழி லாளர்களின் நலன் காக்கும் வகை யில் திருத்தப்பட்டுள்ளது என்றார்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இந்த ஆண்டு அமல்படுத் தப்படும் என்றார்.
அந்நிய முதலீடுகளை ஈர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட் டது, கிராமப்புறங்களில் கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தியதோடு தொழில் புரிவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். பொதுத்துறை நிறு வனங்களை குறைத்து மதிப்பீடு செய்கிறீர்களா என்கிற கேள்விக்கு, எந்த ஒரு நாட்டிலும் அரசுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவ னங்கள் வளர்ச்சிக்கு முக்கிய மானவை. இத்தகைய சூழலில் பொதுத்துறை நிறுவனங்களி லிருந்து உடனடியாக அரசு வெளியேற முடியாது என்று மோடி குறிப்பிட்டார்.