வணிகம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க வேண்டும்: அசோசேம் தலைவர் கருத்து

பிடிஐ

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு உடனடியாக மீட்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என தொழில் துறை அமைப்பான அசோ சேம் கூறியுள்ளது. மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கடன் சுமையை ஏற்றுக் கொள்வதுடன் உணவு தானியங் கள் மற்றும் உணவு மானியம் அளிக்க வேண்டும் என அசோசேம் தலைவர் சுனில் கனோரியா நேற்று குறிப்பிட்டுள்ளார்.

வறட்சி காரணமாக இந்திய பொருளாதாரம் ரூ.6.50 லட்சம் கோடி அளவுக்கு இழப்புகளை சந்திக்கும் என அசோசேம் கணித் துள்ளது. இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 265 மாவட்டங் களில் வறட்சி பாதிப்பு உள்ளது. 33 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள் ளனர் என அசோசேம் மதிப்பிட் டுள்ளது.

மிகப் பெருவாரியான மக்கள் வறுமையுடன் துயரமான வாழ்வா தார நிலைமையில் உள்ளனர். இந்த நிலையில் உண்மையி லேயே 7 சதவீத ஜிடிபி வளர்ச்சி என்பது அர்த்தமில்லாத ஆதாயமாக இருக்கும்.

ஏதாவது ஒரு துறை மற்றொன் றிலிருந்து தனித்திருக்கிறது என்று சொல்ல முடியாது. ஒரு துறை பாதித்தால் அது மற்றொரு துறையையும் பாதிக்கிறது என்று கனோரியா குறிப்பிட்டார்.

வங்கிகள் மொத்தக் கடனை யும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அசோசேம் நெருக்கடி கொடுக் கவில்லை. ஆனால் வங்கிகள் விவசாய கடன்களை விட்டுக் கொடுப்பது அல்லது காலந் தாழ்த்தி கொடுப்பதற்கான சட்ட உரிமை போன்றவற்றை மேற் கொள்ளலாம். விவசாயக் கடன் வாங்கியவர்கள் முன்னெப் போதும் இல்லாத வகையிலான சவாலை எதிர் கொண்டுள்ள நிலையில் வங்கிகள் இதை மேற்கொள்ளலாம் என்று சுனில் கனோரியா குறிப் பிட்டார்.

SCROLL FOR NEXT