வணிகம்

வணிகச் செய்தித் துளிகள்

செய்திப்பிரிவு

குஜராத் முதல்வருடன் மாருதி அதிகாரிகள் சந்திப்பு

குஜராத் மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஆனந்திபென் படேலை மாருதி சுஸுகி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

குஜராத் மாநிலத்தில் மாருதி நிறுவனம் அமைத்து வரும் ஆலையின் பணிகள் குறித்து அவரிடம் விளக்கியதோடு, ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி தங்கள் நிறுவனம் முதலீடுகளை செய்வதாகக் குறிப்பிட்டனர்.

பிஎஸ்என்எல், பவர்கிரிட் ஒப்பந்தம்

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது தொலைத் தொடர்பு சேவையை வடகிழக்கு மாநிலங்களுக்கு விரிவுபடுத்துவதற்காக பவர் கிரிட் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் பிஎஸ்என்எல் இயக்குநர் ஏ.என். ராய் மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அஸ்வனி ஜெயின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

SCROLL FOR NEXT