வணிகம்

ஒமேக்ஸ் விரிவாக்கம்

செய்திப்பிரிவு

வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஃபிரேம் அசெம்பிளி போன்ற உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் ஒமேக்ஸ் ஆட்டோஸ் லிமிடெட் நிறுவனம் தனது ஆலையை விரிவாக்கம் செய்துள்ளது.

வாகன அசெம்பிளி செய்வற்கான உதிரிபாக உற்பத்தியை இந்த ஆலை தொடங்கி முன்னணி நிறுவனத்துக்கு 20 டிரக்குகளை அசெம்பிளி செய்வதற் கான ஆர்டரைப் பெற்றுள்ளது.

வர்த்தக வாகனங்களுக்கான அசெம்பிளி ஆலைகள் பந்த் நகர் மற்றும் லக்னோவில் உள்ளன. இப்போது தென் பிராந்தியத்தில் முழுமையான அசெம்பிளி ஆலையை இந்நிறுவனம் பெங்களூருவில் அமைத்துள்ளது. இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களான டிவிஎஸ், யமஹா, ஹோண்டா மோட்டார் கார்ப்பரேஷன் உள்ளிட்டவற்றுக்கு பிரேம்களை தயாரித்து அளிக்கிறது. வர்த்தக முறையிலான வாகனங்களை உற்பத்தி செய்யும் டாடா நிறுவனத் துக்கு இந்நிறுவனம் அசெம்பிளி தயாரிக்கிறது. கடந்த ஆண்டு இந்நிறுவன வருமானம் ரூ. 1,200 கோடியாகும். ஆண்டுக்கு 10 ஆயிரம் வாகனங்களுக்கு முழுமையான அசெம்பிளியை இந்நிறுவனம் மேற்கொண்டு நிறைவேற்றி வருகிறது.

SCROLL FOR NEXT