வணிகம்

திரையரங்குகளில் முதலீட்டாளர் விழிப்புணர்வு: பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் திட்டம்

பிடிஐ

முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு மற்றும் நிதி சார்ந்த அறிவு ஆகியவற்றை விரிவுபடுத்த செபி திட்டமிட்டிருக்கிறது. அதற்காக திரையரங்குகள் மற்றும் டிஜிட்டல் தளத்தை பயன்படுத்த செபி முடிவு செய்திருக்கிறது. தவிர குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு, அதாவது ஆசிரியர்கள், காவல் துறை என பிரத்யேகமாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செபி திட்டமிட்டு வருகிறது.

தற்போது டிவி சானல்கள், ரேடியோ, பத்திரிகை உள் ளிட்டவை மூலமாக முதலீட் டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல செபி முடிவெடுத் திருக்கிறது. தவிர ஏற்கெனவே பல அமைப்புகளுடன் நடத்தி வரும் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக புதிய பிரசுரங்கள், கையேடு ஆகியவற்றை தயா ரித்து, இந்தியா முழுவதும் விநியோகம் செய்ய முடிவெடுத் திருக்கிறது. கண்காட்சிகள், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முதலீட்டாளர்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

புரோக்கர்களுக்கு கட்டுப்பாடு

அதேபோல பங்குச்சந்தை தரகர்கள் சிறு முதலீட்டாளர்களின் நிதியை தவறாக பயன்படுத்த முடியாத வகையில் செபி நடவடிக்கை எடுத்து வருகிறது. உயர்நிலைக் குழு அமைத்த பரிந்துரைகளை விரைவில் செபி அமல்படுத்த போவதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

அந்த பரிந்துரைகளின்படி பங்குச்சந்தை நிறுவனங்கள் புரோக்கிங் நிறுவனங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் சொத்து மதிப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தரகர்கள் வாடிக்கையாளர்களின் முதலீட்டை தவறாக பயன்படுத் தும்பட்சத்தில் முதலீட்டாளர் களுக்கு தகவல் கொடுக்க வேண் டும். மேலும் பங்குச்சந்தை நிறு வனங்கள் புரோக்கிங் நிறுவனங் களின் நிதி நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

செபியால் பரிந்துரை செய் யப்பட்ட உயர்நிலைக்குழு, பல பரிந்துரைகள் செய்திருக் கிறது.

SCROLL FOR NEXT