வணிகம்

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை காலம் நீட்டிக்க கோரிக்கை

பிடிஐ

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைக் காலத்தை 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும் என்று நிதி அமைச்சகத்திடம் மத்திய வர்த்தகத் றை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வர்த்தக அமைச்சகம் மேற் கொண்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்த அவர், இதற்காக நீண்ட நெடிய விவாதங்கள் மற்றும் ஆலோ சனைகள் நடத்தப்பட்டுள்ளன.

பல தரப்பட்ட ஸ்டார்ட்அப் மற்றும் இது சார்ந்த நிறுவனங் களுக்கு தான் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், பல நிறுவனங்கள் வரிச் சலுகை காலத்தை நீட்டிக்க கோரிக்கை வைத்ததாகக் குறிப்பிட்டார்.

2016-17-ம் நிதி ஆண்டில் புதிய தொழில் முனைவு நடவடிக்கை களுக்காக (இன்குபேட்டர்) 35 நிறுவனங்களுக்கு ரூ.1,100 கோடி ஒதுக்கப்பட்டதாகக் குறிப் பிட்டார்.

SCROLL FOR NEXT