வணிகம்

கேவிபி நிகர லாபம் ரூ.138 கோடி

செய்திப்பிரிவு

கரூர் வைஸ்யா வங்கியின் (கேவிபி) மார்ச் காலாண்டு நிகர லாபம் 138 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 137.83 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் காலாண் டில் மொத்த வருமானம் 1.9 சத வீதம் உயர்ந்து ரூ.1,536 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் ரூ.1,507 கோடியாக நிகர லாபம் இருந்தது.

ஒட்டு மொத்த 2015-16 நிதி ஆண்டில் நிகரலாபம் 22.3 சதவீதம் உயர்ந்து ரூ.567 கோடியாக இருக் கிறது. முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ.464 கோடியாக நிகர லாபம் இருந்தது.

ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் 5,976 கோடி ரூபாயாக இருந்த மொத்த வரு மானம் 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.6,150 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக் கடன் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 1.85 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இப்போது 1.3 சதவீதமாக இருக்கிறது. ரூபாய் அடிப்படையில் பார்க்கும் போது மொத்த வாராக் கடன் ரூ.677 கோடியில் இருந்து ரூ.511 கோடியாக சரிந்திருக்கிறது.

அதேபோல நிகர வாராக்கடனும் 0.78 சதவீதத்தில் இருந்து 0.55 சதவீதமாக சரிந்திருக்கிறது. நிகர வாராக்கடன் ரூ.280 கோடி யில் இருந்து ரூ.216 கோடியாக சரிந்திருக்கிறது. வங்கியின் இயக் குநர் குழு இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.4 வழங்க பரிந் துரை செய்திருக்கிறது. முன்ன தாக இடைக்கால டிவிடெண்ட் ஒரு பங்குக்கு 10 ரூபாய் வழங்கப் பட்டது. கடந்த நிதி ஆண்டில் ஒரு பங்குக்கு மொத்தமாக 14 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் கேவிபி பங்கு 0.39 சத வீதம் உயர்ந்து 477.85 ரூபாயில் முடிவடைந்தது.

SCROLL FOR NEXT