இந்தியாவில் ஆப்பிள் ஐ போன் தயாரிப்பு ஆலை அமைப்பதற்கு தான் ஆர்வமாக இருப்பதாக நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள டிம் குக், தனது பயணத்தின் நிறைவு நாளான நேற்று, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்பு ஆலை அமைத்து இந்திய இளைஞர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகக் கூறினார்.
சைபர் பாதுகாப்பு மற்றும் டேட்டா என்கிரிப்ஷன் தொடர் பாகவும் பிரதமருடன் டிம் குக் ஆலோசனை நடத்தினார். அத்துடன் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங் கள் குறித்தும் விவாதித்தார். அப்போது இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைக்க விரும்புவதாகவும் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவிருப்பதாகவும் தெரி வித்தார். அத்துடன் இந்தியாவில் உள்ள இளைஞர்களின் திறனை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாயிருப்பதாகக் கூறினார்.
ஆப்பிள் நிறுவனம் செயலிகள் உருவாக்கத்துக்கான மையத்தை பெங்களூருவிலும் மேப் (வரைபட) உருவாக்க மையத்தை ஹைத ராபாதிலும் அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளை டிம் குக் தொடங்கி வைத்தார்.
செயலி உருவாக்கத்துக்கு இந்தியாவில் அதிக வாய்ப்புகள் இருப்பதாக மோடியிடம் குக் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியின் செல்போனில் மேம்படுத்தப்பட்ட செயலியையும் தரவிறக்கம் செய்து தந்தார். தனது பயணத்தின்போது மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம் சென்று தரிசித்தது, மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்களுடன் இரவு விருந்து சாப்பிட்டது மற்றும் கான்பூரில் கிரிக்கெட் போட்டியைக் கண்டு ரசித்த விஷயங்களை மோடியிடம் பகிர்ந்து கொண்டார் குக்.
சந்திப்பு முடிந்த உடனேயே இது தொடர்பாக மோடி தனது ட்விட் பக்கத்தில் குக் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தி ருந்தார். டிம் குக்குடன் தான் எடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருந்தார் மோடி.
தனது ட்விட் பக்கத்தில் குக் உடனே பிரதமருக்கு நன்றி தெரிவித்து பதிவேற்றம் செய்தி ருந்தார். அடுத்த இந்திய பய ணத்தை ஆர்வமுடன் எதிர் நோக்கியிருப்பதாக அதில் குறிப் பிட்டிருந்தார்.
இந்தியாவில் தொழில் தொடங்கு வதற்கு மிகவும் எளிதான சூழலை உருவாக்கியமைக்காகவும், மரபு சாரா மின் உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பதற்காகவும் பிரதமருக்கு தனது பாராட்டுதலை குக் தெரிவித்திருந்தார்.
ஆப்பிள் நிறுவனம் 93 சதவீதம் மரபு சாரா எரிசக்தி மூலம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.