வணிகம்

எப்போதெல்லாம் உங்கள் CIBIL ஸ்கோர் குறையும்? - ஒரு தெளிவுப் பார்வை

செய்திப்பிரிவு

குறைவதற்கான வாய்ப்புகள்: வாங்கிய கடனில் நிலுவைத் தொகை இருந்தால் அதைக் கட்டிவிட வேண்டும். சில மாதங்களுக்கான தவணையை ஒருவேளை கட்டாமல் இருந்தால் கூட சிபில் ஸ்கோரைக் குறைக்க வாய்ப்பு உண்டு.

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் சிபில் கணக்கில் சிக்கும் வாய்ப்புண்டு. குறித்த காலத்தை தாண்டி கிரெடிட் கார்டுக்கான தொகையை செலுத்தாமல் விட்டு விட்டால் வங்கி மிக அதிகமான வட்டித் தொகையை வசூலிக்கும். இதனால் சிபில் ஸ்கோரும் குறையத் தொடங்கும்.

வங்கி கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் கடனுக்கான மாதத் தவணையை தாமாக கடன் கொடுத்த நிறுவனம் எடுத்துக் கொள்ள ஏதுவாக அனுமதி கொடுத்து விட்டால் இந்த சிக்கல் தீரும்.

அதிக தவணை ஆபத்தில்லை: வங்கியிலிருந்து கடன் பெறுபவர்கள் நீண்டகாலம் கட்டுவதற்கு பதிலாக குறைவான காலத்தில் கட்டி முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக தொகையை மாத தவணையாக நிர்ணயித்து அதனை கட்டுவர். ஆனால் மாதத் தவணைக்கான தொகை என்பது வருவாயில் குறிப்பிடத்தக்க அளவைவிடவும் அதிகமாக இருந்தால் அது சிபில் ஸ்கோரை பாதிக்க வாய்ப்புண்டு.

எனவே கடன் செலுத்த வேண்டிய காலம் சற்று அதிகமானாலும் பரவாயில்லை. இதன் காரணமாக மாதத் தவணையைச் செலுத்துவதில் சுணக்கம் ஏற்படாது. சிபில் மதிப்பெண் அதிகமாகும்.

தேவையை தீர்மானியுங்கள்: ஒரு வங்கியில் அதிக அளவுக்குக் கடன் பெற அனுமதி வாங்கிவிட்டு பிறகு குறைவான தொகையை மட்டும் கடனாக பெறுவதும் அல்லது முன்கூட்டியே கடனை திருப்பி அடைப்பதும் சிபில் ஸ்கோரை பாதிக்கும். தேவைப்படும் நிதியைக் கணிக்கத் தெரியாதவர் என கூறி சிபில் மதிப்பெண் குறையும்.

ஒரே நேரத்தில் பலவித வங்கிகளில் கடன்களைப் பெறுபவர்களுக்கும் சிபில் ஸ்கோர் குறையும். ஒரு கடனை அடைத்த பிறகே அடுத்தடுத்த கடன்களுக்கு விண்ணப்பித்தால் மட்டுமே சிபில் ஸ்கோர் குறையாமல் இருக்கும்.

நீண்ட நாட்களாக ஒரு வங்கிக் கணக்கைச் சிறப்பாகப் பயன்படுத்துபவர்களுக்கும், அதனுடன் கிரெடிட் கார்டு இருந்தால் அதனையும் முறைப்படி பயன்படுத்துபவர்களுக்கு சிபில் மதிப்பெண் உயர வாய்ப்புண்டு.

திருப்பிச் செலுத்திய பிறகு...: ஒரு பெரிய கடன் தொகையை வங்கிக்குச் செலுத்தி முடித்தபின் அந்த விவரத்தை அந்த வங்கி சிபில் அமைப்புக்குத் தெரியப்படுத்தி விட்டதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

ஏதாவது பெரிய வங்கிக் கடனை முழுவதுமாகச் செலுத்திய பிறகு www.cibil.com என்ற வலைத்தளத்துக்குச் சென்று சிபில் மதிப்பெண் என்னவாக இருக்கிறது என்று பார்த்து உறுதி செய்ய வேண்டும். மதிப்பு மிகவும் குறைவாக இருந்தால் வங்கியின் மூலம் சிபில் அமைப்பை அணுகி தீர்வு பெறலாம். அதன் பிறகு சிபில் ஸ்கோர் சரியாகும்.

> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

SCROLL FOR NEXT