வணிகம்

‘இந்தியாவில் வரித் தாக்கல் செய்வது அமெரிக்காவை விட எளிது’: ரகுராம் ராஜன் தகவல்

செய்திப்பிரிவு

அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் வரித் தாக்கல் செய்வது எளிது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார். லண்டனில் உரையாற்றிய ராஜன் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கூறிய தாவது.

வளர்ந்த நாடுகள் ஊழல் பணத்தை கையாளுவதில் கவன மாக இருக்க வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகளுக்கு முறைகேடாக பணம் செல்கிறது இதில் வளர்ந்த நாடுகள் கவனமாக இருக்க வேண்டும். வரிதான் முக்கிய பிரச்சினையாகும். வரி அமைப்புகளில் இருக்கும் கோளாறுகளால் ஊழல் அதிக ரிக்கிறது. இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது.

தொழில்நுட்பத்தின் மூலம் இதனை சரி செய்யமுடியும். உதார ணத்துக்கு ரயில் டிக்கெட்கள் இப் போது ஆன்லைனில் கொண்டு வரப் பட்டதால், வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. டிக்கெட்களை பதுக்கி தனியாக விற்க முடியாது. வருமான வரித்துறை கணினிமயமாக்கப்பட்டு விட்டதால் கூடுதலாக செலுத்தி வரியை திரும்ப பெற வருமான வரித்துறை ஆய்வாளரிடம் செல்லத் தேவை இல்லை.

இந்தியாவில் ஊழலுக்கு எதி ராக கண்டனங்கள் அதிகரித்து வரு கின்றன.குறிப்பாக சிறுசிறு ஊழல் கள் அதிகரித்துவிட்டன. ஒப்பந்தங் கள் உள்ளிட்ட விஷயங்களில் மேலும் வெளிப்படைத்தன்மையை மத்திய அரசு கொண்டு வரவேண் டும். கடந்த சில வருடங்களாக நிலைமை மேம்பட்டிருந்தாலும் இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்று ராஜன் கூறினார்.

SCROLL FOR NEXT