வணிகம்

பேமென்ட் வங்கி: முடிவை கைவிட்டது டெக் மஹிந்திரா

செய்திப்பிரிவு

பேமென்ட் வங்கி தொடங்கும் திட் டத்தை டெக் மஹிந்திரா கைவிடுவ தாக அறிவித்திருக்கிறது. இயக்குநர் குழு பேமென்ட் வங்கி திட்டத்தை தொடரவேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக தலைமைச் செயல் அதிகாரி சிபி குர்நானி தெரிவித்தார்.

பேமென்ட் வங்கி தொடங்குவதற் காக 15 முதல் 20 நபர்களை பணிக்கு எடுத்துள்ளது, ஆனாலும் சந்தை யில் போட்டி அதிகமாக இருப்ப தாலும், லாப வரம்பு குறைவாக இருப்பதாலும் இந்த திட்டத்தை தொடரமுடியாத நிலை ஏற்பட் டிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித் திருக்கிறது. இந்த அனுமதியை திருப்பிக் கொடுக்கும் மூன்றாவது நிறுவனம் டெக் மஹிந்திரா ஆகும்.

SCROLL FOR NEXT