வணிகம்

காலாண்டு முடிவுகள்

செய்திப்பிரிவு

சுந்தரம் பாசனர்ஸ் லாபம் 56% அதிகரிப்பு

சென்னையைச் சேர்ந்த சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனம் முடிவடைந்த மார்ச் நிதியாண்டில் ரூ.2,641.38 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.2,409.97 கோடியாக இருந்தது.

உள்நாட்டு விற்பனை 15.6 சதவீதம் அதிகரித்து ரூ.1,649.37 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் உள்நாட்டு விற்பனை ரூ.1,426.33 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஆண்டு நிகர லாபம் 56 சதவீதம் அதிகரித்து ரூ.211.17 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் ரூ.135.32 கோடியாக இருந்தது.

4-வது காலாண்டில் நிறுவனத் தின் மொத்த வருமானம் குறிப்பிடத் தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. 4-வது காலாண்டில் மொத்த வருமானம் 17 சதவீதம் உயர்ந்து ரூ.720.69 கோடியாக உள்ளது.

ஜோதி லேபாரட்டரீஸ் லாபம் உயர்வு

நுகர்வோர் பொருட்கள் துறை யில் உள்ள ஜோதி லேபாரட் டரீஸ் நிறுவனத்தின் 2015-16 நிதியாண்டில் நிகர லாபம் 157.95 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டில் ரூ.121.12 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என்று நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிதியாண்டு விற்பனை ரூ.1,664.73 கோடியாக உள்ளது. இது 2014-15 நிதியாண்டில் ரூ.1,505.29 கோடியாக இருந்தது. இதற்கிடையே நேற்றைய வர்த்தகத்தில் இதன் பங்குகள் 3.15 சதவீதம் சரிந்து ரூ.298.20 முடிவடைந்துள்ளது.

2015-16 ஆண்டின் நான்காவது காலாண்டில் நிகர விற்பனை 12.39 சதவீதம் உயர்ந்து ரூ.445.21 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் நிகர விற்பனை ரூ.396.12 கோடியாக இருந்தது என்று நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT