வணிகம்

மார்க் ஜூகர்பெர்க் பாதுகாப்புச் செலவு ரூ.28 கோடி

பிடிஐ

ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் ஜூகர்பெர்க் பாதுகாப்புக் காக கடந்த வருடம் 28 கோடி ரூபாய் (42.6 லட்சம் டாலர்) செலவு செய்திருக்கிறது. 2013 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலத்தில் பாதுகாப் புக்கு ரூ.83 கோடி (1.25 கோடி டாலர் ) செலவு செய்யப்பட்டிருக்கிறது.

நிறுவனத்தின் தலைவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப் பதால் இவ்வளவு தொகையை செலவு செய்திருப்பதாக பங்குச் சந்தைக்கு கொடுத் திருக்கும் தகவலில் தெரிவித் திருக்கிறது.

புளும்பெர்க் தகவல்படி ஃபேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஜூகர் பெர்க் உலகின் எட்டாவது பணக்கார நபர் ஆவர்.

SCROLL FOR NEXT