கடந்த இரு நிதி ஆண்டுகளாக மத்திய அரசு காஸ் மானியத்தை மக்களுக்கு நேரடியாக வழங்கி வருகிறது. இதன் மூலம் 21,000 கோடி ரூபாய் அளவுக்கு சேமிக்கப் பட்டிருக்கிறது. மானியத்தை நேர டியாக வங்கிக் கணக்கில் செலுத் துவதால் போலி பயனாளி களுக்கு மானியம் செல்வது நிறுத் தப்பட்டிருப்பதாக பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சில மாவட்டங்களில் மட்டும் நேரடி மானியம் செலுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது. 2015 ஜனவரி முதல் தேதி முதல் நாடு முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி 18.19 கோடி பயனாளர்கள் மானிய விலையிலான காஸ் இணைப்பை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இதில் 14.85 கோடி பயனாளர் கள் மட்டுமே நேரடி மானிய திட்டத் தில் தங்களை இணைத்துக்கொண் டார்கள். மீதமுள்ள 3.34 கோடி கணக்குகள் போலி அல்லது செயல்படாத கணக்குகள் ஆகும். இதனால் 2014-15-ம் நிதி ஆண் டில் 14,672 கோடி ரூபாய் மீதமா னது.
2015-16-ம் நிதி ஆண்டில் சுமார் 7,000 கோடி ரூபாய் வரை மீதமானது. 2014-15-ம் நிதி ஆண் டில் சராசரியாக ஒரு சிலிண்ட ருக்கு 366 ரூபாய் மானியம் வழங் கப்பட்டிருக்கிறது. ஒரு கணக் குக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர் என்னும் அடிப்படையில் கணக் கிடப்பட்டது. ஆனால் 2015-16-ம் நிதி ஆண்டில் சராசரியாக எவ்வ ளவு மானியம் வழங்கப்பட்டது என்பதை தெரிவிக்க பிரதான் மறுத்துவிட்டார்.