இந்திய தபால் துறையின் பேமென்ட் வங்கி அடுத்த வருடம் மார்ச் முதல் செயல்படத் தொடங்கும் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
2017-ம் ஆண்டு மார்ச் முதல் தபால் துறையின் பேமென்ட் வங்கி செயல்படத்தொடங்கும். இதற்காக மத்திய அமைச்சர வையினை அணுக இருக்கிறோம். இந்த பேமென்ட் வங்கிக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் மற்ற நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்க முடியும்.
இதற்காக இந்தியா மட்டு மல்லாமல் வெளிநாடுகளில் இருந் தும் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங் கள் தபால்துறையுடன் இணைய விருப்பம் தெரிவித்திருக்கின்றன. உலக வங்கி, அமெரிக்காவில் உள்ள சிட்டி வங்கி மற்றும் இங்கி லாந்தில் உள்ள பார்கிளேஸ் வங்கி ஆகியவை இந்திய தபால் துறையுடன் இணைய ஆர்வமாக உள்ளன.
இந்த பேமென்ட் வங்கி மூலம் இன்ஷூரன்ஸ் திட்டங்கள், மியூச்சுவல் பண்ட்கள் உள்ளிட்ட பல நிதி சார்ந்த திட்டங்களை விற்க முடியும். தபால் துறையுடன் இணையும் நிறுவனங்கள் குறித்து இயக்குநர் குழுதான் முடிவு செய்யும்.
அனைவரையும் வங்கிச்சேவை யில் இணைப்பதில் தபால் துறை யின் பேமெண்ட் வங்கி மிக முக்கிய பங்கு வகிக்கும். நாங்கள் இதற்காக 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறோம். 400 கோடி ரூபாய் தபால் துறை முதலீடு செய்யும். மீதமுள்ள 400 கோடி ரூபாய் பங்குகள் மூலம் திரட்டப்படும் என்றார்.
இந்திய தபால் துறைக்கு இந்தியா முழுவதும் சுமார் 1,54,939 அலுவலகங்கள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி 11 நிறுவனங்கள் பேமென்ட் வங்கி தொடங்க கொள்கை அளவி லான அனுமதி வழங்கியது. இந்த அனுமதி 18 மாதங்கள் வரை செல்லும் என்று தெரிவிக்கப் பட்டது. 18 மாதங்களுக்குள் தெளிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் பட்சத்தில் இறுதி அனுமதி வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.