சென்னை: சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் மே மாதத்தில் 12,615 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனையானதை விட இது 42% அதிகமாகும்.
சோனாலிகா நிறுவனம் பிராந்திய அடிப்படையில் விவசாயத் தேவைகளுக்கேற்ற வாகனங்களை வடிவமைத்துத் தருகிறது. மத்தியப் பிரதேச விவசாயிகளுக்கென சோனாலிகா சிக்கந்தர் ஆர்.எக்ஸ். 50 மாடல் டிராக்டர்,12 எப் 3 ஆர் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல குஜராத் விவசாயிகளுக்கென சோனாலிகா எம்.எம். 10 நேரோ டிராக் ரக டிராக்டர் அறிமுகம் செய்யப்பட்டது.