வணிகம்

வரி ஏய்ப்பு செய்வது கண்டறியப்பட்டால் அபராதம்

செய்திப்பிரிவு

சென்னை: வணிகவரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்தாதவர்கள் வரி ஏய்ப்புசெய்வதாக கண்டறியப்பட்டால், வரித்தொகையுடன் அபராதம் மற்றும் வட்டி வசூலிக்கப்படும் என்று வணிகவரி ஆணையர் க.பணீந்திரரெட்டி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து வணிகவரி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 3.26 லட்சம் வணிகர்கள் 2021-22ம் நிதியாண்டில், ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை என கண்டறியப்பட்டது.

94 லட்சம் வணிகர்கள் ரூ.1000க்கும் கீழ் மட்டுமே ஜிஎஸ்டியை கடந்த நிதியாண்டில் செலுத்தியது தெரியவந்துள்ளது.

மே மாதம் 22,430 வணிகர்கள் ரூ.64.21 கோடி வரியை அரசுக்கு செலுத்தியுள்ளனர்.

வரி ஏய்ப்பு ஏதேனும் வணிகவரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்டால் வரித்தொகையுடன் சேர்த்து அபராதம் மற்றும் வட்டி ஆகியவை வசூலிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT