வணிகம்

வாபாக் நிறுவன லாபம் ரூ.132 கோடி

செய்திப்பிரிவு

சென்னை: நீர் சுத்திகரிப்பில் சர்வதேச அளவில் முன்னிலையில் உள்ள விஏடெக் வாபாக் லிமிடெட் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ. 132 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் லாபம் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 3,012 கோடியாகும். இது 6 சதவீத வளர்ச்சியாகும். நிறுவனம் வசம் ரூ. 3,647 கோடி பணிகளுக்கான ஆர்டர் கைவசம் உள்ளது.

ரூ. 10 ஆயிரம் கோடி பணிகளுக்கான ஆர்டர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருமானம் மூன்று மடங்கு உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக உள்ளதாக நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் மிட்டல் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT