வணிகம்

பாரத ஸ்டேட் பாங்க் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தமிழ்நாடு பிராப்பர்ட்டி எக்ஸ்போ’ சென்னை வர்த்தக மையத்தில் ஜூன் 3-ல் தொடக்கம்

செய்திப்பிரிவு

பாரத ஸ்டேட் பாங்க் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தமிழ்நாடு பிராப்பர்ட்டி எக்ஸ்போ - 2022’ சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் (டிரேடு சென்டர்) ஜூன்3-ம் தேதி தொடங்குகிறது. இக்கண்காட்சி ஜூன் 3, 4, 5-ம்தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) நடைபெற உள்ளது.

இதில் அபார்ட்மென்ட்ஸ், வில்லாஸ், சீனியர் சிட்டிசன் கம்யூனிட்டி ஹோம்ஸ், ஹாலிடே ஹோம்ஸ் ஆகியவற்றை சிறப்பு தள்ளுபடியுடன் வாங்கலாம். புதிதாக பிராப்பர்ட்டி வாங்குவதற்கும், சீரமைப்பு செய்வதற்குமான சிறப்பு கடன் வசதி, வேறுபிராப்பர்ட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து எஸ்பிஐ சென்னை வட்டத்தின் தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா கூறும்போது, ‘‘எஸ்பிஐ-யின் வீட்டுக் கடனுக்கான வட்டி 6.65%தான். இது மிக குறைவான வட்டிவிகிதம். மக்கள் வீட்டுக் கடன்வாங்கி பயனடைவதை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளை இக்கண்காட்சியில் வழங்குகிறோம். ஒப்புதல் பெற்ற திட்டங்களுக்கு எந்த கூடுதல்கட்டணமும் கிடையாது. செயல்பாட்டு கட்டணத்தில்கூட 50% தள்ளுபடி உண்டு. கட்டுமான நிறுவனங்களுக்கும் பல சலுகைகளுடன் கடன்வழங்குகிறோம்’’ என்றார்.

ஜூன் 3, 4, 5-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு9 மணி வரை கண்காட்சி நடக்கிறது.

SCROLL FOR NEXT