வணிகம்

50 நபர்களின் வாராக்கடன் மதிப்பு ரூ1.21 லட்சம் கோடி

செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகளில் முதல் 50 வாராக் கடன்களின் மதிப்பு 1.21 லட்சம் கோடி ரூபாயாக இருக் கிறது. நிதித்துறை இணைய மைச்சர் ஜெயந்த் சின்ஹா மாநிலங் களவைக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறினார். இது டிசம்பர் 2015 வரையிலான தகவல்கள் ஆகும்.

கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருந்தும் திருப்பிசெலுத்தாத நபர்களின் எண்ணிக்கை மூன்று ஆண்டுகளில் 5,554-ல் இருந்து 7,686-ஆக அதிகரித்துள்ளது. இவர் கள் திருப்பி செலுத்த வேண்டிய தொகை ரூ.27,749 கோடியில் இருந்து 66,190 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதேபோல டிசம்பர் 2015 வரையில் 500 கோடி ரூபாய்க்கு மேலே 1,365 கணக்கு களுக்கு கடன் கொடுக்கப்பட்டுள் ளது. என்று சின்ஹா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT