வணிகம்

காதி பொருட்கள் விற்பனை ரூ.36,425 கோடி

செய்திப்பிரிவு

பருவமழை குறைவு காரணமாக விற்பனை மந்தமாக உள்ளது என்னும் குற்றச்சாட்டை இந்திய பெரு நிறுவனங்கள் முன்வைக்கும் சூழ்நிலையில் காதி பொருட்களின் விற்பனை வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் உள்ளது. காதி மற்றும் கிராம தொழிற்சாலைகளின் விற்பனை கடந்த வருடத்தை விட 14 சதவீதம் உயர்ந்து 36,425 கோடி ரூபாயாக இருக்கிறது. தேன், சோப்பு, உணவு, கைவினை பொருட்கள் இந்தப் பிரிவில் அடங்கும்.

எப்எம்சிஜி பிரிவில் பாபா ராம்தேவ் நிறுவனத்தை தவிர மற்ற நிறுவனங்களின் வளர்ச்சி சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கடந்த வருடத்தில் வருமானம் இரு மடங்காக உயர்ந்து ரூ.5,000 கோடியாக இருக்கிறது. எப்எம்சிஜி நிறுவனங்களிடம் தொழிற்சாலைகள் இருந்தாலும், காதி பொருட்கள் 7 லட்சத்துக்கும் மேலான தனிநபர்களின் சிறு ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலைகளுக்கு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் மூலம் நிதி கிடைக்கிறது.

இதில் ஒரு சிறு பகுதி காதி வாரியத்திடம் உள்ளது. இதனை காதி மற்றும் கிராம தொழிற்சாலைகள் கமிஷன் (கேவிஐசி) கவனித்துக்கொள்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தனியார் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒட்டு மொத்த கிராம ஆலைகள் கடந்த வருடம் 14 சதவீத வளர்ச்சி அடைந்து ரூ.36,425 கோடி ரூபாயாக இருக்கிறது. 2014-15 நிதி ஆண்டில் 6.29 சதவீத வளர்ச்சி மட்டுமே இருந்தது. 2013-14-ம் நிதி ஆண்டில் 30,073 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை இருந்தது.

SCROLL FOR NEXT