வணிகம்

சென்செக்ஸ் குறியீட்டில் இருந்து பிஹெச்இஎல் வெளியேற்றம்

பிடிஐ

முக்கிய பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் பட்டியலில் இருந்து பிஹெச்இஎல் வெளியேறுகிறது. இதற்கு மாற்றாக பவர் கிரிட் கார்ப்பரேஷன் பங்கு சென்செக்ஸ் பட்டியலில் இணைகிறது. இந்த மாற்றம் வரும் ஜூன் 20-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதேபோல பிஎஸ்இ 100 குறியீட்டிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கெய்ர்ன் இந்தியா பங்கு வெளியேறி, பஜாஜ் பைனான்ஸ் பங்கு அந்த பட்டியலில் உள்ளே நுழைகிறது.

பிஎஸ்இ 200 குறியீட்டில் 7 பங்குகளும், பிஎஸ்இ 500 குறியீட்டில் 20 பங்குகளும் வெளியேறுகிறது.

பிஎஸ்இ 200 குறியீட்டில் சிண்டிகேட் வங்கி, கெய்ர்ன் இந்தியா, இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யூகோ வங்கி, அலாகாபாத் வங்கி மற்றும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன.

SCROLL FOR NEXT