வணிகம்

இந்தியாவில் மிகப் பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது: ஆப்பிள் தலைவர் டிம் குக்

பிடிஐ

ஆப்பிள் தயாரிப்புகளுக்கு இந்தி யாவில் மிகப் பெரிய சந்தை உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு மாபெரும் தொழில்நுட்ப மாற்றம் ஏற்பட உள்ளது. அதிவேக ஒயர்லெஸ் ஒருங்கிணைப்பு ஏற்பட உள்ளது என்று ஆப்பிள் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி டிம் குக் குறிப்பிட்டார்.

உலக அளவிலான மக்கள் தொகையில் 2022ம் ஆண்டுக்குள் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும். குறிப்பாக தற்போது இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் இளைஞர்கள், 25 வயதுக்குட்பட்டவர்கள். இதனால் இந்தியா மிகவும் இளமையான நாடாக இருக்கிறது. இவர்களுக்கு உண்மையிலேயே ஸ்மார்ட்போன் தேவையாக இருக்கிறது.

எல்டிஇ என்று சொல்லப்படுகிற கம்பியில்லா இணைப்பு தொழில் நுட்பத்தில் இந்தியா தற்போது வளரும் நாடாக உள்ளது. தற் போது இல்லை என்றாலும் இந்த ஆண்டுக்குள் இந்த தொழில்நுட்ப வேலைகளை தொடங்கிவிடும். இதன் பிறகு இந்தியாவின் செயல் பாடுகள் மொத்தமாக மாறிவிடும். இதனால் இந்தியாவில் எங்க ளுக்கு மிகப் பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஆப்பிள் ஐபோன் வரிசை யில் புதிய ஐபோனை இந்திய சந் தையில் மக்கள் விரும்புவார்கள். இந்தியாவில் மிகப் பெரிய அளவில் சில்லரை வர்த்தகர்கள் உள்ளனர். ஆனால் பெரிய அளவில் தேசிய அளவிலான சில்லரை வர்த்தகர்கள் கிடையாது என்று கூறினார்.

SCROLL FOR NEXT