சஹாரா குழுமத்துக்கு சொந்த மான 4,700 ஏக்கர் நிலங்கள் விற் பனை செய்யப்பட உள்ளன. இந்த விற்பனை மூலம் ரூ.6,500 கோடி கிடைக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.
தமிழகம் உட்பட 14 மாநிலங் களில் சஹார குழுமத்துக்குச் சொந்தமான 4,700 ஏக்கர் நிலங் களை ஹெச்டிஎப்சி ரியாலிட்டி மற்றும் எஸ்பிஐ கேபிடல் மார் கெட் நிறுவனங்கள் வசம் உள்ளன. தற்போது இந்த நிலங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
சஹாரா நிறுவனத்துக்கு 33,633 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. மும்பையின் ஆம்பி வேலி பகுதியில் 10,600 ஏக்கர் நிலம் உள்ளது. உத்தரபிர தேசத்தின் பல்வேறு நகரங்களில் பரவலாக 1,000 ஏக்கர் நிலம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி சஹாரா குழுமத்தின் 60 சொத் துக்களை ஏலத்தின் அடிப்படை யில் ஹெச்டிஎப்சி ரியாலிட்டி மற்றும் எஸ்பிஐ கேபிடல் மார்கெட் நிறுவனங்களுக்கு அளித்துள்ளது.
இந்த 60 சொத்துக்கள் மூலம் செபிக்கு 6,500 கோடி வசூலாகும் என தெரிகிறது. இந்த நிலங்கள் பல்வேறு மாநிலங்களின் கிராமப்புறங்களில் விவசாய நிலங்களாக உள்ளது என்று தகவல் அறிந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் இந்தூர், உஜ்ஜைன், ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், அசாமில் கவுகாத்தி, தமிழ்நாட்டில் சேலம், குஜராத்தின் பரோடா, போர்பந்தர் போன்ற இடங்களில் இந்த நிறுவனம் சொந்த இடங்களை வைத்துள்ளது.