வணிகம்

சாப்ட்பேங்க் தலைவர் நிகேஷ் அரோரா சம்பளம் ரூ. 500 கோடி

செய்திப்பிரிவு

ஜப்பான் நாட்டு நிறுவனமான சாப்ட்பேங்கின் தலைவர் நிகேஷ் அரோராவின் கடந்த நிதி ஆண்டு சம்பளம் ரூ.500 கோடி. இவர் இந்தியாவில் பிறந்தவர். முன்பு கூகுள் நிறுவனத்தின் பணிபுரிந்த இவர் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பான் நிறுவனத்தில் சேர்ந்தார். முந்தைய நிதி ஆண்டில் சுமார் 900 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார்.

சாப்ட்பேங்க் நிறுவனத்தில் இணையும் போது துணைத்தலைவ ராக இருந்தார். அதன்பின்பு கடந்த வருடம் மே மாதத்தில் தலைவராக பதவி உயர்வு பெற்றார். 35 வருட கால சாப்ட்பேங்க் வரலாற்றில் இந்த பதவி யாருக்கும் வழங்கப் படவில்லை.

அரோரா வாங்கும் சம்பளத்துக்கு இணையாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் கு, வால்ட் டிஸ்னியின் பாப் இகர் ஆகியோர் சம்பளம் பெருகின்றனர்.

சாப்ட் பேங்க் நிறுவனத்தின் முதலீட்டாளார்கள் அரோரா எடுக் கும் முடிவுகள் மற்றும் அவரின் திறமை குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் நிறுவனர் சான் அரோரா மீது எனக்கு முழு நம்பிக்கை இருக் கிறது. என்னுடைய பொறுப்பையும் எனக்கு பின்பு பார்ப்பார் என்று கூறினார். சாப்ட்பேங்க் நிறுவனம் இந்தியாவில் இதுவரை 100 கோடி டாலரை முதலீடு செய்திருக்கிறது. வரும் 10 வருடங்களில் மேலும் 1,000 கோடி டாலரை முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT