சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் செயல் இயக்குநர் மற்றும் மாநிலத் தலைவராக வி.சி. அசோகன் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் எண்ணெய் நிறுவனங்களின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளராகவும் இவர் செயலாற்ற உள்ளார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அசோகன் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, சில்லறை விற்பனை, செயல்பாடுகள் மற்றும் சர்வதேச மார்க்கெட்டிங் ஆகியவற்றில் அனுபவம் பெற்றவர். தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், திருச்சியில் உள்ள மண்டல பொறியியல் கல்லூரியில் வர்த்தக மேலாண்மைப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்.
கேரளா, கர்நாடகா, தமிழகம், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்) பிரிவில் பல்வேறு தலைமைப் பதவிகளையும் மேலாண்மை நிலைகளையும் வகித்து வந்துள்ளார். இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.