சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதலீடுகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. டெல்லியில் 2,000 சிசிக்கு மேலான டீசல் கார் விற்பனைக்கு தடை நீடிப்பதை அடுத்து இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் ரோலண்ட் ஃபோல்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிறுவனத்தின் புதிய காரான ஜிஎல்எஸ் 350 டி மாடல் காரை அறிமுகப்படுத்தி பேசுகையில் இத்தகவலைத் தெரிவித்தார்.
டீசல் கார் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழல் இந்தியாவில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையை உணர்த்துகிறது. இதன் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிபோகும். உச்ச நீதிமன்றம் தடையை நீடிக்கும் வரை தங்கள் நிறுவனம் புதிய முதலீடுகளை மேற்கொள்ளப் போவதில்லை என முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
பெரும்பாலான முதலீட்டுத் திட்டங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படவில்லை. ஆனால் அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், தற்போது சொகுசு கார்களுக்கான சந்தை தற்போதைக்கு விரிவடைய வில்லை என்றாலும், புதிய மாடல் களை அறிமுகப்படுத்த வேண்டு மெனில் அதற்கு முதலீடு தேவைப் படுகிறது. இவ்விதம் முதலீடு செய் யப்படும்போது அது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று குறிப்பிட்டார்.
தடை நீடிக்கப்படுவதால் அனைத்து முதலீட்டுத் திட்டங்களை யும் தாற்காலிகமாக நிறுத்தி வைத் துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ. 1,000 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த ஆண்டு ரூ. 150 கோடியை முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது. இதன் மூலம் சக்கன் ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கப் போவதாக தெரிவித்தது. இந்த ஆலை தற்போது ஆண்டுக்கு 10 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்கிறது. இதை இரு மடங்காக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இப்போது மிகவும் இக்கட்டான சூழல் நிலவுகிறது. எதிர்காலத்தை கணிக்க முடியாத நிலை உள்ளது. என்ன நடக்கும் என்பதே யாருக்கும் தெரியவில்லை. இத்தகைய சூழலில் ஜூலை மாதத்துக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று ஃபோல்கர் கூறினார்.
உச்ச நீதிமன்ற தடை காரண மாக டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் (என்சிஆர் பிராந் தியம்) கார்களை விற்பனை செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. பென்ஸ் மட்டுமின்றி, டாடா நிறுவனத்தின் ஜேஎல்ஆர், டொயோடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் தயா ரிப்புகளும் இதனால் பாதிக்கப் பட்டுள்ளன.