வணிகம்

ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் இறங்கிய பவுன் தங்கம்: 10 நாளில் பவுனுக்கு ரூ.10,200 வரை சரிவு

செய்திப்பிரிவு

சென்னை: ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்​றும் அதிரடி​யாக சரிந்து ரூ.96 ஆயிரத்​துக்கு கீழ் இறங்​கியது. பவுனுக்கு நேற்று ரூ.1,880 குறைந்து, ரூ.95,840-க்கு விற்​கப்​பட்​டது. கடந்த 10 நாட்களில் மட்​டும் பவுனுக்கு ரூ.10,200 வரை குறைந்​துள்​ளது.

சர்​வ​தேச பொருளாதார சூழல், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தப் போவ​தாக வெளிவரும் செய்​தி​கள், வலிமையடையும் அமெரிக்க டாலர், அதிக வட்டி தரும் பத்​திரங்​களை முதலீட்​டாளர்​கள் வாங்கி குவிப்​பது போன்ற காரணங்​களால், தங்​கத்​தின் விலை நவ.9-ம் தேதி முதல் குறைந்து வரு​கிறது.

கடந்த நவ.17-ம் தேதி 11 மாதங்​களுக்​குப் பிறகு, பவுன் தங்​கம் ரூ.1 லட்​சத்​துக்​குக் கீழ் இறங்​கியது. இதன் தொடர்ச்​சி​யாக, சென்​னை​யில் நேற்​றும் ஆபரணத் தங்​கத்​தின் விலை அதிரடி​யாக குறைந்​தது.

பவுனுக்கு ரூ.1,880 குறைந்து, ரூ.95 ஆயிரத்து 840-க்கு விற்​கப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.235 குறைந்து, ரூ.11 ஆயிரத்து 980-க்கு விற்​கப்​பட்​டது. 24 காரட் தங்​கம் ரூ.1 லட்​சத்து 4 ஆயிரத்து 552 ஆக இருந்​தது. கடந்த 10 நாட்​களில் மட்​டும் பவுனுக்கு ரூ.10,200 வரை குறைந்​துள்​ளது.

இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.180 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ரூ.1 லட்​சத்து 80 ஆயிர​மாகவும் இருந்​தது. தங்​கம் விலை குறைந்து வரு​வ​தால், குடும்ப நிகழ்ச்​சிக்​காக தங்க ஆபரணங்​கள் வாங்க எண்​ணி​யிருந்த மக்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT