பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கி மார்ச் காலாண்டில் ரூ.1,736 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண் டில் 546 கோடி ரூபாய் லாப மீட்டியது குறிப்பிடத்தக்கது. வாராக் கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை அதிகரித்திருப்பதால் வங்கி நஷ்டமடைந்திருக்கிறது.
கடந்த வருடம் மார்ச் காலாண் டில் 3,722 கோடி ரூபாய் அள வுக்கு வாராக்கடனுக்காக ஒதுக் கீடு செய்யப்பட்டது. இப்போது 4,450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மொத்த வாராக்கடன் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 5.88 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 10.98 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 2.88 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் இப் போது 6.78 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
கடந்த 2015-16 நிதி ஆண்டில் ஒட்டு மொத்தமாக 3,665 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டில் 873 கோடி ரூபாய் அளவுக்கு லாப மீட்டியது குறிப்பிடத்தக்கது.
டெபாசிட் வளர்ச்சி 2.26%, கடன் வழங்கும் விகிதம் 3.61% இருக்கிறது. இந்த நிதி ஆண்டில் 6,000 கோடி ரூபாய் மூலதன நிதி தேவை என்றும், இதுவரை 450 கோடி ரூபாய் திரட்டப்பட்டிருக்கிறது என்றும் வங்கியின் நிர்வாக இயக்குநர் கிஷோர் காரத் தெரிவித்தார்.