வணிகம்

ஜியோ உலக மையத்தில் 200 பேர் செல்லும் மின்தூக்கி

செய்திப்பிரிவு

மும்பை: தொழில், வர்த்தகம் மற்றும் கலாச்சார செயல்பாடுகளுக்கு என்று மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனம் ‘ஜியோ உலக மைய’த்தை 18.5 ஏக்கர் பரப்பளவில் நிறுவியுள்ளது.

இந்த மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மின்தூக்கி ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. பரவலாக பயன்பாட்டில் இருக்கும் மின்தூக்கியில் ஒரே சமயத்தில் 10 பேர் செல்லலாம். ஆனால், ஜியோ உலக மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மின்தூக்கியில் ஒரே சமயத்தில் 200 பேர் வரையில் செல்லலாம் என்று அந்த மின்தூக்கியை உருவாக்கியுள்ள கோனே நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மின்தூக்கி 25.78 சதுரமீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கிறது. மிக விசாலமான அறைபோல் இருக்கிறது. இந்த மின்தூக்கியின் எடை 16 டன் ஆகும். ஒரு வினாடிக்கு ஒரு மீட்டர் தூரம் இந்த மின்தூக்கி பயணிக்கும்.

SCROLL FOR NEXT