வணிகம்

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு: உலகை உலுக்கும் பணவீக்க அச்சம்

செய்திப்பிரிவு

மும்பை: உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வருவதால் வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தி வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் ஆட்டம் கண்டு வருகின்றன. மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் 700 புள்ளிகளுக்குமேல் சரிவு கண்டது.

உக்ரைன் மீது ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

பணவீக்க விகிதத்தினை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தது. பேங்க் ஆப் இங்கிலாந்தும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பணவீக்க விகிதம் உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

வட்டி விகிதம் உயர்வு

இதுமட்டுமின்றி இந்தியாவில் ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதம் 40 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தி 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிகள் வழங்கும் தொழில் வணிகத் துறைக்கான கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், நகைக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன.

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் சரிவு தொடர்கிறது. மும்பைப் பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கியவுடனே சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 678 புள்ளிகள் குறைந்து, 54,156 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடர்ந்துது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 198 புள்ளிகள் சரிந்து, 16,212 புள்ளிகளாக இருந்தது. அதன் பிறகு சற்று ஏறி வர்த்தகம் ஆகி வருகிறது.

ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், டெக் மகிந்திரா, மாருதி, பஜாஜ் ட்வின்ஸ், ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், ஐசிஐசிஐ வங்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு கண்டன. இதுபோலவே ஹின்டால்கோ, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவு கண்டுள்ளன.

SCROLL FOR NEXT