புதிய திட்டங்களுக்கு விரைவான ஒப்புதல் கொடுப்பது, வெளிப் படைத்தன்மை ஆகியவற்றின் மூலம் வீடுகளின் விலை 20 சதவீதம் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது என்று ஹெச்.டி.எஃப்.சி.யின் தலைவர் தீபக் பரேக் தெரிவித்திருக்கிறார்.
மேலும் நிலம் வாங்குவதற்கு கடன் வழங்க வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
முன்னுரிமை வீட்டுக்கடன் தொகை இப்போது 25 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த எல்லையை 50 லட்ச ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.
ஆடம்பர திட்டங்களிலிருந்து பில்டர்கள் தங்களது கவனத்தை திருப்பி, அனைவரும் வாங்கும் வசதி இருக்கும் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டெவலப்பர்கள் நிலம் வாங்க தேவைப்படும் நிதியை வங்கிகள் கொடுப்பதற்கு ஒழுங்குமுறை ஆணையங்கள் தடை செய்திருக்கின்றன. இதனால் வங்கி அல்லாத நிதி நிறுவனம் மற்றும் இதர வழிகளிலிருந்து நிதியை திரட்டும் பட்சத்தில்,18 முதல் 22 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு டெவலப்பர்கள் ஆளாகிறார்கள் என்றார்.
ஒரு திட்டத்துக்கு அனுமதி வாங்க 18 முதல் 24 மாதங்கள் ஆகிறது. ஓவ்வொரு கட்டத்திலும் செலவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இறுதியாக வீடு வாங்குபவர் மீது இந்த கட்டணம் செல்கிறது என்றார்.