வணிகம்

பனாமா பேப்பர்ஸ் புதிய பட்டியலில் 2,000 இந்தியர்கள்

செய்திப்பிரிவு

வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பணம் குவித்தோரின் புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் 2,000 இந்தியர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர்கள் நெடோ, ஹாங்காங், பிரிட்டனின் வெர்ஜின் ஐலண்ட்ஸ் உள்ளிட்ட 21 நாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாகக் கூறப் பட்டுள்ளது.

புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு திங்களன்று 2.6 டெராபைட்டுகள் கொண்ட பனாமா பேப்பர்களை வெளியிட்டுள் ளது. வெளிநாட்டில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் பணத்தை பதுக்கிய முக்கிய பிரமுகர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்தியா தொடர்பான 37,000 கோப்புகளை அம்பலப் படுத்தியுள்ளது. இந்தியா தொடர்பான ஆவணங்களில் 22 நிறுவனங்கள், 1,046 தனிநபர்கள், 42 இடைத்தரகர்கள், 828 முகவரிகள் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, போபால் ஆகிய நகரங்களில் உள்ள முகவரிகள் இடம்பெற்றுள்ளன.

பனாமா நாட்டை சேர்ந்த மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன், உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான பிரபலங்கள் சொத்துகளை பதுக்கி உள்ளனர். இந்த ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட 500 இந்தியர்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது

புலனாய்வுப் பத்திரிகையாளர் களின் சர்வதேச கூட்டமைப்பு தங்களது பொறுப்புத் துறப்பு அறிக்கையில், “வெளிநாடுகளில் தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அறக்கட்டளைகளில் சட்டத்துக் குட்பட்ட பயன்பாடுகளும் உள்ளன. எனவே இந்தத் தரவுகளில் குறிப் பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், தனிநபர்கள் சட்டவிரோதமாகவோ, முறையற்ற விதத்திலோ செயல் பட்டதாக நாங்கள் குறிப்பிட வில்லை. சில நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்கள் ஒன்றாகவே உள்ளன. எனவே இதில் குறிப்பிடப்பட்டுள்ள தனிநபர்கள், அடையாளங்கள் ஆகியவற்றை முகவரியுடன் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தரவுகளில் தனிநபர்கள், நிறுவனங்கள் பெயர்கள், உள்ளூர் பதிவு செய்யப்பட்ட முகவரிகள், அயல்நாட்டு நிறுவனங்கள் அல்லது இவர்கள் பங்கு வகிக்கும் நிறுவனங் கள் ஆகியவை கொடுக்கப் பட்டுள்ளன. வங்கிக் கணக்குகள் முதலிய சொந்த விவரங்கள் இதில் அளிக்கப்படவில்லை.

இது தொடர்பாக, விசாரணை நடத்த விசாரணை குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. மேலும், பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் வெளியாகி உள்ள பெயர் பட்டியலில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் வருமான வரித்துறை, ஆர்பிஐ ஆகியவற்றை அமலாக் கத்துறையினரும் அணுகி இதில் தொடர்புடையவர்களின் பெயர் களைக் கேட்டுள்ளது. பனாமா விலிருந்து இந்திய விசாரணை அமைப்புகளுக்கு இதுவரை அதிகாரபூர்வ ஆவணங்களின் நகல்கள் வரவில்லை. புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறக்கட்டளைகள், மற்றும் சட்டபூர்வ நிறுவனங்கள் கடந்த 40 ஆண்டுகளாக செயலாற்றி வருபவை. இதில் 3.2 லட்சம் நிறுவனங்கள் அடங்கும்.

அயல்நாட்டு சொத்து விவரங்களை வெளியிடாமல் இருப்பது இந்தியாவில் சட்ட நடவடிக்கையை ஈர்ப்பதாகும். இதில் சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அமலாக் கப்பிரிவு அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மற்றும் நிதிமுறைகேடு தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளும். தற்போது வெளி யாகியுள்ள தகவல்கள் 40 வருட மாக இருந்த தகவல்கள் ஆகும். 1977-ம் ஆண்டு முதல் 2015 வரை வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் பட்டி யல் வெளியிடப்பட்டுள்ளது.

இது பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. பின்னர் இந்த மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் சிபிஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT