நடுத்தர காலத்தில் பொருளாதாரம் மேம்படும். இந்த வருட இறுதியில் ஜிஎஸ்டி அமல்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதனால் நிலைமை மேலும் பலமாகும் என்று ஹெச்எஸ்பிசி அறிக்கை கூறுகிறது.
முக்கியமான நான்கு மசோதாக் களில் மூன்று (ஆதார் மசோதா, திவால் சட்டம், கொள்கை வகுப்பு குழு உருவாக்கம்) நிறைவேற்றப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இந்த வருட இறுதியில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்ஸாம் தேர்தலில் பாஜக வென்றாலும் உடனடியாக மாநிலங் களவையில் பெரிய மாற்றம் நிக ழாது. 2019-ம் ஆண்டு மே மாதத்தில் தான் மாநிலங்களவையில் (அஸ் ஸாம் மாநிலம் மூலம்) எண்ணிக்கை உயரும். இந்த நிலையில் மற்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஜிஎஸ்டியை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஹெச்எஸ்பிசி அறிக்கை தெரிவிக்கிறது.