கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது செயல்பாடுகளை தொடங்கிய பந்தன் வங்கி செப்டம்பர் முதல் மார்ச் 2016 வரையான காலத்தில் ரூ.275 கோடியை லாபமாக ஈட்டி யுள்ளது. வங்கி ஒரு கவுரமான லாபத்தை ஈட்டியுள்ளது என்று வங்கியின் நிறுவன தலைமை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சந்திரசேகர் கோஷ் தெரிவித்துள்ளார்.
வட்டி மூலமான வருமானம் ரூ.932 கோடியாகும். வட்டி அல் லாத பிற இனங்களின் மூலமான வருமானம் ரூ. 150 கோடி என்றும் அவர் கூறினார்.
7 மாதங்களில் வங்கி அளித்துள்ள கடன் அளவு ரூ. 15,493 கோடியாகும். திரட்டிய சேமிப்பு ரூ. 12,088 கோடியாகும்.