வணிகம்

உலகின் பணக்காரர்கள் பட்டியல் 5-ம் இடத்தில் கவுதம் அதானி: வாரன் பஃபெட் பின்தங்கினார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலகின் பணக்காரர்கள் வரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் கவுதம் அதானி. இதுவரை ஐந்தாமிடத்தில் இருந்த வாரன் பஃபெட் 6-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

போர்ப்ஸ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானியின் நிகர சொத்து மதிப்பு 12,280 கோடி டாலராகும். வாரன் பஃபெடின் சொத்து மதிப்பு 12,170 கோடி டாலராக உள்ளது. துறைமும் சார்ந்த சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள ஓஷியன்ஸ் பார்க்கிள் லிமிடெட் நிறுவனத்தை அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் துணை நிறுவனமான அதானி ஹார்பர் சர்வீசஸ் நிறுவனம் கையகப்படுத்துவதாக கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக மாநாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் அம்மாநிலத்தில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது. உலக தரத்திலான துறைமுக கட்டமைப்பை ஏற்படுத்துவது மற்றும் டேட்டா மையம் அமைப்பது மற்றும் கடலுக்கடியில் கண்ணாடியிழை கேபிள் போடுவது உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப் போவதாக அதானி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT