இந்தியாவில் உள்ள துறைமுகங் களை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் துறைமுக மேம்பாடுகளுக் கான முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்களுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார். `இந்திய கடல்சார் துறை 2016' மாநாட்டில் மோடி இதைக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள 7,500 கிலோ மீட்டர் கடற்கரையும் இந்திய பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய அங்கமாக உள்ளது என்று கூறினார். மும்பையில் நேற்று இந்திய கடல்சார் துறை 2016 முதல் மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மேலும் பேசியதாவது.
இந்திய கடலோர பகுதியின் துறைமுகங்கள் மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சம் கோடி முதலீடு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்திய துறைமுகங்களின் கையாளும் திறன் 140 கோடி டன்னாக உள்ளது. இந்த அளவை 2025 ஆம் ஆண்டுக் குள் 300 கோடி டன்னாக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம் என்றார். துறைமுகங்களின் வளர்ச்சிக்காக முதலீட்டாளர்களை எதிர்பார்க் கிறோம் என்றார்.
அதிகரித்துள்ள வர்த்தக தேவைகளை சமாளிப்பதற்கு ஏற்ப இந்தியாவில் ஐந்து புதிய துறைமுகங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்தியாவின் பொருளாதாரம் மேலும் விரைவான வளர்ச்சி பாதை யில் செல்லும் என்றார். இந்த புதிய துறைமுகங்கள் பல்வேறு மாநிலங் களில் அமைக்கப்பட உள்ளன.
இந்தியாவின் சரக்கு போக்கு வரத்து செயல்பாடுகளில் மிகப் பெரிய வாய்ப்புகள் உருவாக உள் ளது. இந்த வாய்ப்புகளை முதலீட் டாளர்கள் தவறவிடக் கூடாது. இந்த நீண்ட கடற்கரை பகுதிகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களை மகிழ்ச்சி யாக வரவேற்கிறோம் என்றார். இந்திய அரசியல் சாசனத்தை கட்டமைத்த அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அவர்தான் நாட்டினுடைய நதிகள் மற்றும் உள்நாட்டு நீர் போக்கு வரத்து கொள்கைகளையும் வடிவமைத்தவர் என்பதையும் நினைவூட்டினார்.
இந்த துறையை மேம்படுத்த விரிவான திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இந்திய கடலோர பகுதிகளில் முதலீடு செய்வதற்கு ஏற்ப 250 திட்டங்களை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
இந்த திட்டங்களில் 12 முக்கிய துறைமுகங்களை மேம்படுத்துவது, 8 மாநில மற்றும் யூனியன் பிரதேச கடல் பகுதிகளை மேம்படுத்து வதும், சாகர்மாலா திட்ட செயல்பாடு களின் கீழ் 100 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதும் அடங்கும் என்று பிரதமர் தெரி வித்தார்.