வணிகம்

அந்நிய முதலீடு ஒரு லட்சம் கோடி ரூபாய்

செய்திப்பிரிவு

இந்த ஆண்டில் இந்திய சந்தையில் ஒரு லட்சம் கோடி அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைந்திருக்கும் மத்திய அரசு நிலையானதாக இருப்பதால் சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது.

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தகவல் களின்படி இந்திய பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு 51,433 கோடி ரூபாயாக இதுவரை இருக்கிறது.

அதேபோல இந்திய கடன் சந்தையில் 52,115 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டும் சேர்த்து 1,03,548 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஜூன் மாதம் முதலீடு செய்யப்பட்ட 11,625 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

அந்நிய முதலீடு காரணமாக இந்த ஆண்டு மட்டும் சென்செக்ஸ் 20 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் (2013) இந்திய சந்தையில் செய்யப்பட்ட மொத்த அந்நிய முதலீடு 62,288 கோடி ரூபாய் மட்டுமே. இதில் 1.13 லட்சம் கோடி ரூபாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. கடன் சந்தையில் 50,848 கோடி ரூபாய் வெளியே எடுக்கப் பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT