புதுடெல்லி: இந்தியாவில் 2011-ம் ஆண்டு நிலவரப்படி ஏழ்மை 22.5% ஆக இருந்தது.2019-ல் அது 10.2 சதவீதமாக குறைந் துள்ளது என உலக வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக கிராமப்புறங்களில் கடும் ஏழ்மை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது என்று உலக வங்கி சார்பாக, பொருளாதார நிபுணர்கள் சுதிர்தா சின்ஹா ராய் மற்றும் ராய் வான் டெர் வீடே இணைந்து எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த பத்தாண்டுகளில் இருமுறை ஏழ்மை விகிதம் சற்று அதிகரித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக 2016-ல் நகர்புறங்களிலும், 2019-ல் பொருளாதாரமந்தநிலை காரணமாக கிராமப்புறங்களிலும் ஏழ்மை சற்று அதிகரித்தது என்று அந்தக் கட்டுரை யில் தெரிவிக் கப்பட்டுள்ளது.