விஜய் மல்லையா வங்கிகளுக்கு திருப்பி அளிப்பதாக இருந்த 4,000 கோடியை வங்கிகள் கூட்டமைப்பு நிராகரித்தது. ஆனால் தற்போது வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி யில் 6,000 கோடி ரூபாயை விஜய் மல்லையா திருப்பி தர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
முன்னதாக விஜய் மல்லை யாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை வலியுறுத்தி வருவதை யொட்டி மேலும் விஜய் மல்லையா விற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் விஜய் மல்லையா வங்கி களுக்கு திருப்பி செலுத்த வேண்டிய தொகையை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4,900 கோடி ரூபாயை விஜய் மல்லையா உடனடியாக செலுத்த வேண்டும் என்று வங்கிகள் எதிர்பார்க்கின்றன. மேலும் வட்டித் தொகையை குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்த வேண்டும் என்று வங்கிகள் எதிர்பார்ப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் விஜய் மல்லையா திருப்பி தர முன்வந்த 4,000 கோடி ரூபாயை வங்கிகள் கூட்டமைப்பு நிராகரிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து விஜய் மல்லையா தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்| ஏப்ரல் 21-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வங்கிகள் அவரது பதிலுக்கு ஏப்ரல் 25-ம் தேதி க்குள் விளக்கம் அளிக்க வேண் டும் என்று உத்தரவிட்டது. ஆனால் விஜய் மல்லையாவுக்கு அனுப்பப் பட்ட மின்னஞ்சலுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார்.
நாங்கள் முன்பு திருப்பித் தர முன்வந்த தொகையை விட அதிகமாக எதிர்பார்க்கிறோம். ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால இடைவெளியை பற்றி தெளிவோடு வர வேண்டும் என்று மூத்த வங்கி அதிகாரி தெரிவித்தார்.
நேரில் ஆஜராக 3 முறை வாய்ப்புகள் அளித்தும் மல்லையா ஆஜராகவில்லை. மார்ச் 18, ஏப்ரல் 2, ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் மல்லையா ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மூன்று முறையும் விஜய் மல்லையா ஆஜராகவில்லை.
விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று அமலாக்க இயக்குநரகம், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.