வணிகம்

அமேசான் சிஇஓ குழுவில் இந்திய நிர்வாகி சேர்ப்பு

செய்திப்பிரிவு

அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஜெஃப் பிஸோஸின் பிரத்யேக குழுவில் (எஸ் அணி) இந்தியர் சேர்க்கப்பட்டுள்ளார். அமேசான் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்குநரான அமித் அகர்வாலை இந்த அணியில் சேருமாறு ஜெஃப் பிஸோஸ் இ-மெயில் அனுப்பியுள்ளார்.

இ-காமர்ஸ் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனத்தின் மதிப்பு 10,700 கோடி டாலராகும். இந்நிறுவனத்தின் முக்கிய உத்திகள் வகுப்பதற்காக நிறுவனத்தை உருவாக்கிய ஜெஃப் பிஸோஸ் அணியில் முக்கியமானவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் இந்தியப் பிரிவைச் சேர்ந்த அமித் அகர்வால் சேர்ந்துள்ளார். எஸ் அணியில் உள்ளவர்கள் நேரடியாக ஜெஃப் பிஸோஸ் கட்டுப்பாட்டின்கீழ் வருவர்.

இது தொடர்பாக இணைய தளத்தில் அழைப்பு விடுத்துள்ள ஜெஃப் பிஸோஸ், எஸ் அணியில் அமித் சேர வேண்டும் என்றும், இந்தியாவில் அமித்தும் அவரது குழுவும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அமித்தின் அனுபவத்தை எஸ் பிரிவு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு அவரை குழுவில் சேர்த்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT