வணிகம்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு: ஜேஐபிஎல் இயக்குநர்கள் 2 பேருக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் தண்டனை

செய்திப்பிரிவு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தொடர்புடை யதாக குற்றம் சாட்டப்பட்ட ஜார்க் கண்ட் மற்றும் இஸ்பட் பிரைவேட் லிமிடெட் (ஜேஐபிஎல்) இயக்கு நர்கள் ஆர்சி ருங்தா மற்றும் ஆர்எஸ் ருங்தா ஆகியோருக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சிறப்பு நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தண்டனை விதிக்கப்படும் முதலாவது வழக்கு இதுவாகும். இந்த வழக்கில் ஜேஐபிஎல் நிறுவனத்துக்கு ரூ. 25 லட்சம் அபராதமும், இயக்குநர் களுக்கு ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மார்ச் 28-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் அரசுக்கு தவறான தகவல்களை அளித்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை ஜேஐபிஎல் நிறுவனம் பெற்றதாக குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய இயக்குநர்களுக்கு தண்டனை விதிப்பது தொடர்பாக மார்ச் 31-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக இருந் தது. பின்னர் தண்டனை குறித்த தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது இயக்குநர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவர்கள் இருவர் மீதும் குற்றவியல் தண்டனை சட்ட விதிமுறைகள் படி குற்றம் சாட்ட வேண்டாம் என்றும், அவர்கள் புரிந்தது பொருளாதார குற்றம் என்றும் வாதிட்டார்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட சுரங்கத் திலிருந்து இதுவரை நிலக்கரி வெட்டியெடுக்கப்படவில்லை. இதனால் ரூ. 200 கோடி அளவுக்கு நிறுவனம் நஷ்டமடைந்துவிட்டது. இந்த தண்டனையே போதுமானது என்று வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

மார்ச் மாதம் நடந்த விசாரணையின்போது இந்த வழக்கில் நிறுவனமும் அதன் இயக்குநர்களும் மோசம் புரிந்து விட்டதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பர்ஷார் குறிப் பிட்டார். தெரிந்தே இத்தகைய மோசடியில் தவறு புரியும் நோக்கத்தில் இயக்குநர்கள் செயல் பட்டது மிக தெள்ளத் தெளிவாக விசாரணையில் சிபிஐ நிரூபித் துள்ளதாக நீதிபதி தனது 132 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக மோசடி வழக்கில் அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். அந்த வகையில் ருங்தாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT